வத்தலக்குண்டு பகுதியில் 20-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
வத்தலக்குண்டு பகுதியில் வருகிற 20-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
திண்டுக்கல்
வத்தலக்குண்டு துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, கணவாய்பட்டி, கட்டகாமன்பட்டி, ஆடுசாபட்டி, குரும்பபட்டி, கன்னிமார்கோவில்பட்டி, பண்ணைப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, சாமியார் மூப்பனூர், கீழகோவில்பட்டி, வெங்கடாஸ்திரிகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story