தூத்துக்குடியில் வருகிற 24-ந்தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்


தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வருகிற 24-ந்தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என ஆணையாளர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

இதனால் அன்றைய தினம் மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தெரிவித்து உள்ளார்.


Next Story