பாரதியார் வசித்த இடத்தில் நினைவுதினம் அனுசரிப்பு


பாரதியார் வசித்த இடத்தில் நினைவுதினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 11 Sept 2022 11:27 PM IST (Updated: 11 Sept 2022 11:27 PM IST)
t-max-icont-min-icon

மேலநாகையில் பாரதியார் வசித்த இடத்தில் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி அருகே உள்ள மேலநாகையில் பாரதியார் 10 நாட்கள் வசித்தார். வரலாற்று சிறப்புமிக்க மேலநாகையில் மகாகவி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் பாரதியாரின் 101-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அறக்கட்டளை தலைவர் பாரதி பூமிநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்- கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், ஏசுதாஸ், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சேர்ந்த வ.சேதுராமன், யு.எஸ்.பொன்முடி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற முன்னாள் மாநில செயலாளர் காமராசு, மன்னார்குடி தமிழ்ச்சங்க தலைவர் விஜயசந்திரன், மனிதம் அரிமா சங்க தலைவர் ராமதாஸ், பாரதிதாசன் கல்வி அறக்கட்டளை தலைவர் அன்பழகன் உள்பட பலர் பங்கேற்று பாரதியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story