கோவில்பட்டியில் நினைவுநாளை ஒட்டி சங்கரலிங்கனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை


கோவில்பட்டியில் நினைவுநாளை ஒட்டி சங்கரலிங்கனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 14 Oct 2023 12:15 AM IST (Updated: 14 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நினைவுநாளை ஒட்டி சங்கரலிங்கனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாளை முன்னிட்டு, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமையில், நகர்மன்ற உறுப்பினரும் டாக்டர் சின்னையா சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட துணைத் தலைவருமான தவமணி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் கூட்டமைப்பு செயலாளர் பெஞ்சமின் பிராங்களின், நிர்வாகிகள் ஆ.சம்பத்குமார், கருப்பசாமி, கலைச்செல்வன், மக்கள் நீதிமய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், நாம் தமிழர் கட்சி ரவிக்குமார், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அருள்தாஸ், பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை காளிதாஸ், வியாபாரிகள் சங்க பேரவை ஜாகீர் உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story