வீரமரணம் அடைந்த போலீசாருக்கு நினைவு தினம் அனுசரிப்பு


வீரமரணம் அடைந்த போலீசாருக்கு நினைவு தினம் அனுசரிப்பு
x

பணியின்போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

மயிலாடுதுறை

இந்தியா முழுவதும் பணியின்போது வீரமரணம் அடைந்த ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் போலீசாருக்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி காவலர் நீத்தார் நினைவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நேற்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக காவலர் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் லலிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் மயிலாடுதுறை மாவட்டத்தில் உயிர்நீத்த போலீசாருக்கு மலர்வளையம் வைத்து 36 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மற்றும் போலீசார் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக உயிர் நீத்த காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதை நடந்தது. இதில் போலீஸ் அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற கட்டுரை மற்றும் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற 10 மாணவர்களுக்கும், 72 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகளையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.


Next Story