தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாள்- சிலைக்கு தலைவர்கள் மரியாதை
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 42-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
சென்னை,
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 42-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
சி.பா.ஆதித்தனார் சிலைக்கு 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.
மேலும் தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம் மற்றும் அரசியல் தலைவர்கள், பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story