கூடலூரில் கும்பாபிஷேக விழா தொடக்கம்:முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்


கூடலூரில் கும்பாபிஷேக விழா தொடக்கம்:முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:46 PM GMT)

கூடலூரில் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா தொடக்க நாளில் ஏராளமான பக்தர்கள் புனித நீர் குடங்கள், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா தொடக்க நாளில் ஏராளமான பக்தர்கள் புனித நீர் குடங்கள், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

முளைப்பாரி ஊர்வலம்

கூடலூரில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 9 மணிக்கு செவிடிப்பேட்டை சக்தி முனிஸ்வரன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் குடங்கள், முளைப்பாரி எடுத்துக்கொண்டு புதிய பஸ் நிலையம், மெயின் ரோடு, பழைய பஸ் நிலையம் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து யாகசாலையில் முளைப்பாரிகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (21-ந் தேதி) காலை 7 மணி முதல் கணபதி ஹோமம் உள்பட பல்வேறு விசேஷ பூஜைகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் முதற்கால யாக பூஜைகளும், 22-ந் தேதி 2 மற்றும் 3 -ம் கால பூஜைகளும் நடக்கிறது.

மகா கும்பாபிஷேகம்

23-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு 4-ம் கால பூஜைகள், 6 மணிக்கு கடம் புறப்பாடும், 8 எனக்கு பரிவார தெய்வங்களின் விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூலவர் சக்தி விநாயகர் விமான கோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து பல்வேறு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

முன்னதாக கோவிலின் கிழக்கு வாசலில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோபுரம் திறப்பு விழா நடக்கிறது. 24 -ந் தேதி முதல் மண்டலாபிஷேக வழிபாட்டு பூஜைகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.


Next Story