தூய ஆரோக்கிய அன்னை திருத்தல விழா தொடக்கம்


தூய ஆரோக்கிய அன்னை திருத்தல விழா தொடக்கம்
x

தூய ஆரோக்கிய அன்னை திருத்தல விழா தொடங்கியது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மேற்கு ரிசர்வ்லைன் பகுதியில் உள்ள தூய ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் 21-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 6 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. பின்னர் திருக்கொடி பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எண்ணற்ற பேர் கலந்து கொண்டனர். பின்னர் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மறை மாவட்ட முன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார். அப்போது வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செபஸ்டின் ஜெரோம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நிகழ்ச்சி வருகிற 8-ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது.



Next Story