சேலத்தில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.89 குறைப்பு
சேலத்தில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.89 குறைக்கப்பட்டு உள்ளது.
சேலம்
சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பு மாதத்திற்கான புதிய விலையை நேற்று எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.
இதில் வர்த்தக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் 2 ஆயிரத்து 221 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று வர்த்தக சிலிண்டர் விலை ரூ.89 குறைந்து 2 ஆயிரத்து 132 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
Next Story