வரி செலுத்தாததால் வணிக வளாகத்துக்கு சீல் வைப்பு
திண்டிவனத்தில் வரி செலுத்தாததால் வணிக வளாகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
விழுப்புரம்
திண்டிவனம்:
திண்டிவனம் நகராட்சிக்கு சிலர் குடிநீர் வரி, சொத்து வரி செலுத்தாமல் உள்ளனர். இதனால் வரிபாக்கி அதிகளவு உள்ளது. இதனை வசூலிக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமாக வணிக வளாகம் உள்ளது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திண்டிவனம் கிளை மற்றும் கடைகள் உள்ளன. இந்த வணிக வளாகத்துக்கான சொத்து வரி ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 314-ஐ ராஜேந்திரன் நகராட்சிக்கு செலுத்தவில்லை.
இந்த நிலையில் நகராட்சி மேலாளர் சந்திரா, வருவாய் ஆய்வாளர் குணசேகர் மற்றும் அதிகாரிகள் நேற்று ராஜேந்திரனின் வணிக வளாகத்தை பூட்டி சீல் வைத்தனர்.
Related Tags :
Next Story