வணிகவரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


வணிகவரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடியில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகவரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகவரித்துறை ஊழியர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கம் சார்பில் பீச் ரோட்டில் உள்ள வணிகவரித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பா. சங்கர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நில அளவைத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அண்ணாமலை பரமசிவன் வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு உதவி பெறும் கல்லூரிகள் அலுவலர் சங்க மண்டல செயலாளர் எஸ்.பி.கணேசன், தமிழ்நாடு மீன்வளத்துறை ஊழியர் சங்க பிரியா, தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கத்தை சேர்ந்த துணை மாநில வரி அலுவலர் சோமசுந்தரம், மேலாளர் சுடலைமுத்து ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் 1000 துணை மாநில வரி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான ஆவணத்தை தனியாக பராமரித்து உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். தேவையற்ற, அவசர, கால அவகாசம் வழங்காமல் அறிக்கைகள் கோருவதை தவிர்க்க வேண்டும், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆய்வு கூட்டங்களை தவிர்த்து களப்பணி ஆற்ற கள அலுவலர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும். 2021-ம் ஆண்டு நவம்பரில் கோட்ட மாறுதல் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் தாய் கோட்டத்துக்கு கோட்ட மாறுதல் வழங்க வேண்டும். பயணப்படி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் சில்லறை செலவின நிதி ஒதுக்கீடு கோருதல், கோட்ட மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளில் உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story