குளச்சல் துறைமுகத்தில் மீன் வளத்துறை ஆணையர் திடீர் ஆய்வு


குளச்சல் துறைமுகத்தில் மீன் வளத்துறை ஆணையர் திடீர் ஆய்வு
x

குளச்சல் துறைமுகத்தில் மீன் வளத்துறை ஆணையர் திடீர் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் மீன்பிடித்துறைமுகத்துக்கு தமிழக மீன் வளத்துறை ஆணையர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ். திடீரென்று வந்து ஆய்வு மேற்கொண்டார். துறைமுகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஐஸ் பிளாண்டை பார்வையிட்டு, அதை இம்மாதம் இறுதியில் திறக்க ஆலோசனை வழங்கினார்.

பின்னர் அவர் விசைப்படகு சங்க தலைவர் பிரான்சிஸ், துணைத்தலைவர் வர்கீஸ், செயலாளர் பிராங்கிளின், இணை செயலாளர் ஆன்றனிதாஸ், பொருளாளர் அந்திரியாஸ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நாகர்கோவில் மீன்துறை துணை இயக்குனர் மோகன்ராஜ், குளச்சல் மீன்துறை துணை இயக்குனர் விர்ஜில் கிராஸ் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர். குளச்சல் மீன்பிடித்துறைமுக செயலாக்கம் குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் அவர் துறைமுகத்தில் சுத்தமான குடிநீர் கிடைக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அதிகாரிகளிடம் கூறினார். அதன்பிறகு அவர் தேங்காப்பட்டணம் துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்றார்


Next Story