இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கமிஷனர் ஆய்வு
மேல்மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர்
வேலூரை அடுத்த மேல்மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.11 கோடி மதிப்பில் 220 வீடுகள் கட்டும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் விரைவில் இந்த வீடுகள் திறக்கப்பட்டு இலங்கை தமிழர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த நிலையில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை கமிஷனர் ஜெசிந்தா லாரன்ஸ் நேற்று மாலை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டுள்ள வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அனைத்து பணிகளையும் தரமாகவும், விரைந்து முடிக்கவும் அரசு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது வேலூர் உதவி கலெக்டர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட் ரமேஷ்பாபு, வேலூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சத்தியமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story