பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற போலீசாரின் குழந்தைகளுக்கு கமிஷனர் பரிசுத்தொகை
பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற போலீசாரின் குழந்தைகளுக்கு கமிஷனர் பரிசுத்தொகை வழங்கினார்
மதுரை
மதுரை மாநகர போலீசில் பணிபுரியும் போலீசாரின் குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக பிளஸ்-2 தேர்வில் முதல் 10 இடங்களை பெறும் குழந்தைகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த 2020-2021 ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வில் முதல் 10 இடங்களை பெற்ற போலீசாரின் குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. அதில் முதல் பரிசு 7,500 ரூபாயும், இரண்டாம் பரிசு தொகை 5,500 ரூபாயும், மூன்றாம் பரிசு தொகை 3,500 ரூபாய் மற்றும் மீதமுள்ள மாணவர்களுக்கு தலா 2,500 ரூபாய் பரிசு தொகைக்கான காசோலையை போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் வழங்கினார். மேலும் அவர் அதிக மதிப்பெண் பெற்ற நீங்கள் வாழ்க்கையில் மென்மேலும் உயர்ந்து தங்களின் பெற்றோரை பெருமை அடைய செய்ய வேண்டும் என்று கூறி வாழ்த்தினார்.
Related Tags :
Next Story