11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
படிக்கச் சொல்லி பெற்றோர் கண்டித்ததால் 11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
11-ம் வகுப்பு மாணவி
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நடுவதியம் பகுதியை சேர்ந்தவர் பாலு. இவரது மகள் கோபிகா ஸ்ரீ (வயது 16). இவர் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.கோபிகா ஸ்ரீ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்ததால் பெற்றோர் படிப்பு சம்பந்தமாக கண்டித்தும், டியூசன் சென்று நன்றாக படிக்கும்படியும் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். இதனால் ேகாபிகா ஸ்ரீ மனமுடைந்து காணப்பட்டார். இதையடுத்து கோபிகா ஸ்ரீயின் பெற்றோர் நேற்று காலை வேலைக்கு சென்று விட்டனர்.
தற்கொலை
இந்தநிலையில் கோபிகா ஸ்ரீ வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்த கோபிகா ஸ்ரீயின் தங்கை யுவஸ்ரீ சத்தம் போட்டு உள்ளார். இவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் கோபிகா ஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு கோபிகா ஸ்ரீயை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த தற்கொலை குறித்து பாலு கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.