சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய குழு அமைப்பு


சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய குழு அமைப்பு
x

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.

சென்னை,

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்யக் தேடுதல் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. கர்நாடக மத்திய பல்கலை. துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனபந்து, பாரதிதாசன் பல்கலை. பேராசிரியர் ஜெகதீசன் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

துணைவேந்தர் நியமனத்திற்கு கவர்னர் ஏற்கனவே தேடுதல் குழு அமைத்த நிலையில் தமிழக அரசும் குழு அமைத்துள்ளது. யுஜிசி பிரதிநிதியை நிராகரித்து தமிழக அரசு தனியாக தேர்வுக் குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு கவர்னர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story