நுகர்பொருள் வாணிபக்கழக பட்டியல் எழுத்தர் தற்கொலை

நுகர்பொருள் வாணிபக்கழக பட்டியல் எழுத்தர் தற்கொலை
x

தலைஞாயிறு அருகே நுகர்பொருள் வாணிபக்கழக பட்டியல் எழுத்தர் விஷம் குடித்து தற்கொைல செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு அருகே நுகர்பொருள் வாணிபக்கழக பட்டியல் எழுத்தர் விஷம் குடித்து தற்கொைல செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டியல் எழுத்தர்

நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த வண்டல் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் கர்ணன்(வயது 52). இவர், வேலூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பட்டியல் எழுத்தராக பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சொந்த கிராமத்திற்கு வந்தார்.

விஷம் குடித்து தற்கொலை

சம்பவத்தன்று கர்ணன், வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கர்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த கர்ணனுக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story