ஓமலூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்த இரும்பு கம்பிகளால் பரபரப்பு-போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை


ஓமலூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்த இரும்பு கம்பிகளால் பரபரப்பு-போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை
x

ஓமலூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்த இரும்பு கம்பிகளால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் நேரில் விசாரணை நடத்தினார்.

சேலம்

ஓமலூர்:

ரெயில்வே தண்டவாளம்

சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கும், சேலத்தில் இருந்து மேட்டூருக்கும் ெரயில்வே தண்டவாளம் செல்கிறது. நேற்று மாலை ஓமலூர் ெரயில்வே மேம்பாலத்தின் அடியில் ெரயில்வே தண்டவாளத்தில் சுமார் 2 அடி நீளமுள்ள இரும்பு துண்டு தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி ரெயில்வே போலீசாருக்கும், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ்க்கும் ரெயில்வே ஊழியர்கள் தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்தவுடன் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, ரெயில்வே இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனர். ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்த இரும்பு துண்டுகள் அகற்றப்பட்டது. அதனை போலீசார் எடுத்து சென்றனர்.

பராமரிப்பு பணி

இந்த தண்டவாளத்தில் கடந்த 15 நாட்களாக பராமரிப்பு பணி நடக்கிறது. அப்படி இருந்தும் தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வீசியவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story