நாமக்கல் மாவட்டத்தில், ஜி.எஸ்.டி. வரி விதிப்ைப கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல் மாவட்டத்தில், ஜி.எஸ்.டி. வரி விதிப்ைப கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல்

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல்

நாமக்கல் பூங்கா சாலையில் அரிசி, பருப்பு உள்பட பல்வேறு உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் பிரதேச அமைப்பு குழுவின் அமைப்பாளர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கந்தசாமி ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அரிசி, பருப்பு, மாவு, வெல்லம், தயிர் மற்றும் கோதுமை உள்பட பல்வேறு உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை திரும்ப மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயமணி, மாவட்ட குழு உறுப்பினர் சிவராஜ், கிளை செயலாளர்கள் கருணாநிதி, மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராசிபுரம், பள்ளிபாளையம்

மத்திய அரசு உணவு பொருட்கள் மீதான வரி விதிப்பை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ராசிபுரம் பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராசிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கந்தசாமி, பிரதேச குழு செயலாளர் பெரியசாமி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வரி விதிப்பை கைவிட வலியுறுத்தி அரிசி மூட்டைகளை தலையில் சுமந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாவட்ட குழு உறுப்பினர் ராணி, நகர செயலாளர் சண்முகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் துரை, மாதேஸ்வரன், காளியப்பன், நாகேஷ், சுப்பிரமணி, கிளை செயலாளர் பன்னீர்செல்வம், விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம் பஸ் நிலைய 4 ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பள்ளிபாளையம் ஒன்றியக்குழு உறுப்பினர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் குமாரபாளையம் சாலையில் அக்ரஹாரம் பகுதியில் செயல்படும் பைனான்ஸ் ஒன்றில் மர்மமான முறையில் இறந்த விசைத்தறி தொழிலாளி செந்தில்குமார் மரணம் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும். தமிழக அரசு கந்துவட்டி முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ரவி, செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், அசோகன், வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் லட்சுமணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எலச்சிபாளையம்

எலச்சிபாளையம் பஸ் நிலையத்தில் உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி விதிப்பை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரஹமத், ரமேஷ் கிட்டுசாமி ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story