ஆணவ படுகொலைக்கு எதிராக தடுப்பு சட்டம் இயற்ற வேண்டும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி


ஆணவ படுகொலைக்கு எதிராக தடுப்பு சட்டம் இயற்ற வேண்டும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 20 April 2023 7:00 PM GMT (Updated: 20 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

ஆணவ படுகொலைக்கு எதிராக தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக காதல் திருமணம் செய்பவர்கள் படுகொலை செய்யப்படுவது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. குறிப்பாக இங்குள்ள பட்டியலின மக்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.

இதையொட்டி ஆணவ படுகொலைக்கு எதிராக தடுப்பு சட்டத்தை இயற்றகோரியும் மே 3-ந் தேதி கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இடஒதுக்கீட்டுக்கு வரவேற்பு

மதம் மாறிய பட்டியலின மக்களுக்கு, தமிழக அரசு இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். தி.மு.க. அமைச்சர்கள் மீது அண்ணாமலை ஊழல் புகார் கொடுப்பதற்கு அவருக்கு அடிப்படை தகுதி உள்ளதா? மேலும் அவர் ஊழல் புகார் கொடுப்பார் என பார்த்தால், சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார்.

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதவை உரிய காலத்திற்குள் முடிவெடுத்து கொடுக்க வேண்டும் என்பதுதான் கவர்னரின் பணி. ஆனால் 15 மசோதாக்கள் 1½ ஆண்டுகள் கிடப்பில் உள்ளது. கவர்னராக இருந்து கொண்டு என்ன வேண்டுமானாலும் பேசக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது கட்சியின் மாநில குழு உறுப்பினர் டில்லிபாபு, மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், மாதர் சங்க செயலாளர் ஆஞ்சலா மேரி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story