மத்திய அரசை கண்டித்து நடைபயணம்
மத்திய அரசை கண்டித்து நடைபயணம் நடந்தது.
நாகை அருகே செல்லூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து நடைபயணம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சரபோஜி தலைமை தாங்கினார். நாகை நகர செயலாளர் குணாநிதி முன்னிலை வகித்தார். இதில் இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் புதியவன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் நீதிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நாகை புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடை பயண நிகழ்ச்சி நடந்தது. இதேபோல் வாய்மேடு அருகே உள்ள ஆயக்காரன்புலத்தில் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நடைபயணம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணைச் செயலாளர் பாலகுரு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய பொருளாளர் முருகானந்தம், மாவட்ட நிர்வாக குழுவை சேர்ந்த வீரப்பன், செங்குட்டுவன், காசி அருளொளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.