இந்திய கம்யூனிஸ்டு கட்சி 98-வது ஆண்டு தொடக்க விழா


இந்திய கம்யூனிஸ்டு கட்சி 98-வது ஆண்டு தொடக்க விழா
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தகட்டூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி 98-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது

நாகப்பட்டினம்

வாய்மேடு:

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் கடைத் தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 98-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்னு பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அங்கு 97 கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. 98-வது கொடியினை கட்சியின் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் ஏற்றி வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் வீரப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் நாராயணன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், ஒன்றிய துணை செயலாளர் பாலகுரு, விவசாய சங்க ஒன்றிய தலைவர் அருள் ஒளி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் பழனியப்பன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story