இந்திய கம்யூனிஸ்டு கட்சியினா் பிரசார நடைபயணம்
திருமருகலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினா் பிரசார நடைபயணம் சென்றனர்.
திட்டச்சேரி:
மத்திய பா.ஜ.க ஆட்சியை அகற்றுவோம், மக்களையும், நாட்டையும் காப்பாற்றுவோம் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபயணம் நடைபெறுகிறது. திருமருகல் ஒன்றியத்தில் 5 குழுக்களாக பிரிந்து நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. நடைபயணத்தில் பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி உயர்வை பொதுமக்களிடம் எடுத்துக்கூறியும், துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. நேற்று திருமருகல் ஊராட்சியில் 3-வது நாளாக பிரசார நடைபயணம் நடந்தது.இந்த நடைபயணத்தை இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன் தொடங்கி வைத்தார்.இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் மகேந்திரன், லெனின்பாபு, விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய செயலாளர் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.