இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு


இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு நடைபெற்றது.

தேசிய மாநாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற அக்டோபர் மாதம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய அளவிலான மாநாடு ஆந்திர மாநிலத்தில் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட மாநாடு நடைபெறுகிறது.

இந்தியா பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில் பா.ஜ.க. நாட்டில் மத சண்டையை ஏற்படுத்தி மக்களை பிளவுபடுத்த முயற்சி செய்கிறது. இதனை முறியடிக்க இந்திய கம்யூனிஸ்டு கட்சி அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

திரைப்படம்

மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:- குடியிருப்போர் அவரவர் இடத்தில் குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

ஒற்றை தலைமை விவாகரத்தில் அ.தி.மு.க. என்ற திரைப்படத்தை பா.ஜ.க. என்ற இயக்குனர் இயக்குவதாகவும் அவர்கள் இயக்குவதற்கு ஏற்றாற்போல் அ.தி.மு.க.வினர் நடித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்தில் இருந்து செம்படை பேரணி நடைபெற்றது. இந்த பேரணி 3 கி.மீ. தூரம் கடந்து விழா நடைபெற்ற மேடையை வந்தடைந்தது.


Next Story