இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு


இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு நடந்தது

திருநெல்வேலி

வள்ளியூர்:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெல்லை மாவட்ட மாநாடு வள்ளியூரில் 2 நாட்கள் நடந்தது. முதல் நாளில் பேரணி, பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி நடந்தது. பேரணியை எம்.எஸ்.மணியன், வேம்பு சுப்பையா ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் தலைமை தாங்கினார். தேசிய நிர்வாக குழு உறுப்பினர்கள் சுப்பராயன், மகேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம், மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமணன், தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சடையப்பன், ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், பெரும்படையார் ஆகியோர் பேசினார்கள்.

2-ம் நாள் அன்று மாவட்ட மாநாடு நடந்தது. சங்கரன்கோவில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பொறுப்பாளர் முத்துகிருஷ்ணன், சுரேஷ் தலைமையில் கொண்டு வரப்பட்ட மாநாட்டு கொடியை மாநில துணை செயலாளர் சுப்புராயன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து வள்ளியூர் முருகன் கொடியேற்றி வைத்தார். மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். புதிய மாவட்ட குழு தேர்வு, மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு, தகுதி ஆய்வுக்குழு அறிக்கை மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், கலைமுருகன் நன்றி கூறினார்.


Next Story