இந்திய கம்யூனிஸ்டு கட்சி தர்ணா


இந்திய கம்யூனிஸ்டு கட்சி தர்ணா
x

மாவட்டத்தில் 8 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


மாவட்டத்தில் 8 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அனைத்து கிராம பகுதிகளுக்கும் குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மாவட்டத்தில் 8 இடங்களில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

விருதுநகர், சேத்தூர், அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு, ராஜபாளையம், திருத்தங்கல், கல்லூரணி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 240 பேர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் லிங்கம் சேத்தூரிலும், தேசிய குழு உறுப்பினர் ராமசாமி ஸ்ரீவில்லிபுத்தூரிலும் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகில் நடந்த தர்ணா போராட்டத்தை மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். இதில் நகர, ஒன்றிய, மாவட்ட குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருத்தங்கல்

திருத்தங்கல் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரக்கோரியும், சுகாதாரத்தை மேம்படுத்த கழிப்பறை வசதி செய்து தரக்கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. திருத்தங்கல் ரெயில் நிலையம் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற இந்த தர்ணா பேராட்டத்துக்கு நகர செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். காளியப்பன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட துணை செயலாளர் சமுத்திரம், வட்டார செயலாளர் ஜீவா, சிவகாசி நகர செயலாளர் இக்பால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தர்ணாவில் ஜவகர், கலைவாசகன், முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார்.

துணைச் செயலாளர் கரியமால் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயற்குழு இளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வத்திராயிருப்பு

வத்திராயிருப்பில் நடைபெற்ற போராட்டத்தினை முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தொடங்கி வைத்தார். தாலுகா செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் தவமணி முன்னிலை வகித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரிசாமி போராட்டத்தினை முடித்து வைத்தார்.

இதில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story