திருக்கோவிலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்பு


திருக்கோவிலூரில்  இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம்  மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்பு
x

திருக்கோவிலூரில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருக்கோவிலூர் ஒன்றிய 19-வது மாநாட்டையொட்டி திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பு காந்தி சிலை அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்பாவு, நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி, வளர்மதி, நகர செயலாளர் கிப்ஸ், ஒன்றிய செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு மாநாடு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். முன்னதாக நடந்த ஒன்றிய மாநாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது நீடிக்கும் திருக்கோவிலூர் வட்டத்தை எவ்வித பிரிப்பும் இன்றி தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே நீடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.அரியூர் கிராமத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் அரசு கலைக் கல்லூரி அமைப்பதோடு, வீடற்ற ஏழைகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்.

தேசிய ஊரக வேலை திட்ட பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 100 நாட்களுக்கு குறையாமல் வேலையையும், அதற்காக அரசு அறிவித்த கூலியையும் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் 26 பேர் கொண்ட ஒன்றியக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story