இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடந்தது.
கரூர் அருகே உள்ள வேலுசாமிபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சேகர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் லட்சுமி காந்தன், நகர குழு உறுப்பினர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குழு உறுப்பினர் ராமசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், அரிக்காரம் பாளையம் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதி அனாதீனம் என்னும் வகைநிலத்தை நத்தம் புறம்போக்கு வகை நிலமாக வகைமாற்றி இலவச பட்டா வழங்க வேண்டும். இந்திரா காலனி மற்றும் 1-வது வார்டு பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நகர குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கிளை செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். முடிவில் துணைசெயலாளர் பெருமாள் நன்றி கூறினார்.