இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
மத்திய அரசை கண்டித்து நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கோஷம் எழுப்பினர்.
நீடாமங்கலம்;
மத்திய அரசை கண்டித்து நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கோஷம் எழுப்பினர்.
சாலை மறியல்
விலை வாசி உயர்வு, பெட்ரோல்- டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நீடாமங்கலத்தில் நேற்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ரெ.ஞானமோகன், ஒன்றிய செயலாளர் சு.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். சாலை மறியல் போராட்டத்தில் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் உள்பட சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.
150 பேர் கைது
முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலம்- தஞ்சாவூர் சாலை பகுதியிலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து வங்கியை அடைந்தனர். பின்னர் அவர்கள் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஒருவரை இறந்தவர் போல படுக்க வைத்து கோஷம் எழுப்பினா்.சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 150 பேரை நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.