இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

தக்கலை:

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

பா.ஜனதா ஆட்சியில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிப்பு, மக்களை பிரிந்தாளும் செயல் ஆகியவற்றை கண்டித்து தக்கலை வட்டார இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கனரா வங்கி முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு வட்டார செயலாளர் ராஜூ தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், துணைசெயலாளர் சுரேஷ்மிய்யதாஸ் உட்பட பலர் பேசினர். இதில் செல்வராணி, இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த தக்கலை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் சிறை வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story