இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெருமுனை பிரசாரம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெருமுனை பிரசாரம்
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆலங்குடி வடகாடு முக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பா.ஜ.க. ஆட்சியை கண்டித்தும், நாட்டையும், மக்களையும் காப்பாற்றுவோம் என்று தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் திலகர் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் முருகன், முத்துக்கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளில் கூறியவாறு நடை முறைப்படுத்தப்படாதது குறித்து மக்களிடையே தெரிவிக்கும் விதமாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பிரசாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் பாலசுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் இந்திராணி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்கமணி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் இந்திராணி மற்றும் ஒன்றிய குழு மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story