ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மரம் வெட்டும் தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை

வாலாஜாபேட்டையில் உள்ள இலங்கைத் தமிழர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் பன்னீர்செல்வம் (வயது 52). மரம் வெட்டும் தொழிலாளியான இவர் கடந்த மே மாதம் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து உயிரிழந்தார்.

உயிரிழந்த பன்னீர்செல்வத்தின் குடும்பத்திற்கு இதுநாள் வரை எந்தவித உதவியும் வழங்கப்பட வில்லை. அவரது குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி முத்துக்கடை பஸ் நிலையத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story