போலீஸ் நிலையத்தை முற்றுகையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முயற்சி


போலீஸ் நிலையத்தை முற்றுகையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முயற்சி
x

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முயற்சி செய்தனர்.

நாகப்பட்டினம்

கீழ்வேளூர் அருகே உள்ள வடகரை ஊராட்சி மன்ற தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினருமான பாண்டியனை தாக்கியதை கண்டித்தும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நாகை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், கட்சி நிர்வாகிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதன்பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story