சமுதாய வளைகாப்பு விழா
சமுதாய வளைகாப்பு விழா
தஞ்சை மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியம்
சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, விழாவை தொடங்கி வைத்து அரசின் திட்டங்கள் குறித்து பேசினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, செல்வேந்திரன், சடையப்பன், கிருஷ்ணமூர்த்தி, பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சவுந்தர்ராஜன், தி.மு.க. அவைத்தலைவர் சேகர், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழாவில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழம், சத்துணவு பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசை வழங்கப்பட்டது. முன்னதாக பேராவூரணி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நவீனா ரெட்டி வரவேற்றார். முடிவில் சேதுபாவாசத்திரம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அனுசுயா நன்றி கூறினார்.