சாத்தான்குளத்தில்சமுதாய வளைகாப்பு விழா


சாத்தான்குளத்தில்சமுதாய வளைகாப்பு விழா
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில்சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வட்டார அளவில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் யூனியன் தலைவர் ஜெயபதி தலைமை தாங்கினார். பேருராட்சித் தலைவர் ரெஜினி ஸ்டெல்லாபாய் முன்னிலை வகித்தார். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயாதுரைபாண்டியன் வரவேற்றார். இங்குள்ள தனியார் திருமண்டபத்தில் சுற்று வட்டார பகுதியில் இருந்து வந்திருந்த 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு, அனைவருக்கும் சீர் வரிசை வழங்கப்பட்டது. இதில் யூனியன் ஆணையர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு பல வகையான அருசுவை உணவு வழங்கப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதில் திட்ட மேற்பார்வையாளர் வசந்தா, வட்டார ஒருங்கிணைப்பாளர் அருள்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார திட்ட உதவியாளர் வில்லியம் நன்றி கூறினார்.


Next Story