250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா


250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
x

கன்னிவாடி அருகே 250 கர்ப்பிணிகளுக்கு நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி பங்கேற்றார்.

திண்டுக்கல்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிவாடி அருகே ஸ்ரீராமபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. விழாவுக்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி, வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்து பேசினார்.

அவர் பேசும்போது, அனைத்து கர்ப்பிணிகளும் சந்தோஷமான மனதுடன் இருக்க வேண்டும். நன்கு குழந்தைகளை பெற்றெடுத்து சீரும், சிறப்புடன் வாழ வேண்டும் என வாழ்த்தினார். இதைத்தொடர்ந்து பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் வழங்கினார். மேலும் கர்ப்பிணிகளுடன் அமர்ந்து அமைச்சர் குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.

முன்னதாக ஸ்ரீராமபுரம் பேரூராட்சி தலைவர் ஷகிலா ராஜா வரவேற்றார், மாவட்ட தி.மு.க. பொருளாளர் சத்தியமூர்த்தி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சிவ.குருசாமி, ஸ்ரீராமபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் முருகேசன், ஒன்றிய அவைத்தலைவர் வெள்ளையன், தி.மு.க. பொறுப்பாளர்கள் ரங்கசாமி, ராஜேஷ் பெருமாள், உதயகுமார், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதா, திருமலைசாமி, ஒன்றிய செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story