350 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு


350 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
x

ஆற்காடு அருகே 350 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு அருகே 350 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்.

சமுதாய வளைகாப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து, ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 350 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை, ஏழு வகையான உணவுகளையும் வழங்கி வாழ்த்தினார்.

முன்னதாக கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போடப்பட்டிருந்த கோலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி அரங்கினையும் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது:-

முன்மாதிரி திட்டம்

அண்ணா, கலைஞர் ஆகியோர் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தார்களோ அதனை இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆட்சி பொறுப்பேற்றவுடன் மகளிருக்கு இலவச பஸ் பயணம். அதிகப்படியான கடன் உதவி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் இது போன்ற பயனுள்ள பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அவருடைய செயல்பாடுகள், திட்டங்கள் அனைத்தும் ஒரு முன்மாதிரியாக உள்ளது. ஏழைப் பெண்கள் எதற்கும் கவலை படக்கூடாது. கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்றார்.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு தொகுதி ஜே.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ஒன்றியக் குழு தலைவர்கள் திமிரி அசோக், ஆற்காடு புவனேஸ்வரி சத்தியநாதன், திமிரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரமேஷ், ஆற்காடு நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், மேல்விஷாரம் நகரமன்ற தலைவர் எஸ்.டி.முகமது அமீன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story