கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
திருப்பத்தூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடந்தது.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பணிகள் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திருப்பத்தூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். விழாவின் சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து ெகாண்டு 150 கர்ப்பிணிகளுக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1000 வழங்கினார். மேலும் 5 வகை கலவை சாதம், பூ, பழங்கள், வளையல்கள் என வளைக்காப்பு பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட விழிப்புணர்வு குழு உறுப்பினர் கே.எஸ்.நாராயணன், திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கான்முகமது, ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன், இளைஞரணி எம்.புதூர் கண்ணன், சுகாதார துணை இயக்குனர் விஜயசந்திரன், குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர்கள் பரமேஸ்வரி, தாரணி, நெற்குப்பை பேரூராட்சி மன்றத்தலைவர் பொசலான், பேரூராட்சி உறுப்பினர்கள், சரண்யா, ராஜேஸ்வரி, பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டனர்.