ரூ.70 லட்சத்தில் சமுதாயக்கூடம்


ரூ.70 லட்சத்தில் சமுதாயக்கூடம்
x
தினத்தந்தி 4 Aug 2023 1:30 AM IST (Updated: 4 Aug 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

தென்கரை பேரூராட்சியில் சமுதாயக்கூடத்திற்கு பூமி பூஜை நடந்தது.

தேனி

பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் ஹவுசிங் போர்டு காலனி உள்ளது. இங்கு பெரியகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.70 லட்சம் செலவில் புதிய சமுதாயக் கூடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை விழா நடந்தது. விழாவிற்கு பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி வைத்தார்.

விழாவில் தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், துணைத் தலைவர் ராதா, பேரூராட்சி செயல் அலுவலர் மோகன் குமார், கவுன்சிலர்கள் தேவராஜ், கைலாசம், கோமதி, லட்சுமணன், சிட்டம்மாள், அழகுத்தாய், தென்கரை பேரூர் தி.மு.க. செயலாளர் பாலமுருகன், பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story