குடிநீர் குழாய் இணைப்புக்கு சமூக பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும்


குடிநீர் குழாய் இணைப்புக்கு சமூக பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும்
x

தனி நபர் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் போது சமூக பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் அறிவுறுத்தி உள்ளார்.

திருவண்ணாமலை

ஊரக உள்ளாட்சி பகுதிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும் போது சமூக பங்களிப்பு தொகை எஸ்.சி., எஸ்.டி. குடியிருப்பு பகுதிகள், வனப்பகுதிகள், மலை பிரதேசங்களில் 5 சதவீதம், இதர குடியிருப்பு பகுதிகளில் 10 சதவீதம் என்ற முறையில் பொது மக்கள், தன்னார்வலர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து சமூக பங்களிப்பு தொகை வசூல் செய்து சம்பந்தப்பட்ட ஊராட்சி கணக்கு எண் 10-ல் வரவு வைக்கப்பட்டு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு காசோலையாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும், தங்களது வீடுகளுக்கு தனி நபர் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும் போது சமூக பங்களிப்பு தொகை சம்பந்தபட்ட ஊராட்சி கணக்கு எண் 10-ல் செலுத்தி இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.


Next Story