ரூ.25 லட்சத்தில் சமுதாயக்கூடம்
தலைஞாயிறில் ரூ.25 லட்சத்தில் சமுதாயக்கூடம்: ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ.திறந்து வைத்தார்
நாகப்பட்டினம்
வாய்மேடு:
தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட காலணி தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சத்தில் புதிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இந்த சமுதாயக்கூடத்தை, வேதாரண்யம் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். முன்னதாக பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் செந்தமிழ்ச்செல்வி பிச்சையன், துணைத்தலைவர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சவுரிராஜன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ரேவதி சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story