போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலையில் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவேஷ்குமார் தலைமை தாங்கினார். போலீஸ் துணை கமிஷனர்கள் (கிழக்கு) ஆதர்ஷ் பசேரா, அனிதா (தலைமையிடம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காவல் ஆளிநகர்கள், அமைச்சு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசந்திரன், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பொன் ரகு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சிநாதன், மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் மற்றும் அமைச்சு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு சமூகநீதிநாள் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின்பகிர்மான வட்டத்தின் சார்பில் தியாகராஜநகரில் உள்ள மின்வாரிய மத்திய அலுவலகத்தில் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நெல்லை மின்உற்பத்தி மேற்பார்வை பொறியாளர் தாமோதரன், மரபுசாரா எரிசக்தி துறை மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், பகிர்மான செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ்மணி, அகநிலை தணிக்கை துணை தலைமை அலுவலர் சுரேஷ்பாண்டியன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.