கழிப்பறை மூடப்பட்டதால் பயணிகள் அவதி


கழிப்பறை மூடப்பட்டதால் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அய்யன்கொல்லியில் கழிப்பறை மூடப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பஜார் உள்ளது. இந்த வழியாக சுல்தான்பத்தேரிக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் தமிழக, கேரள அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தினமும் பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அங்கு பயணிகள் நிழற்குடை அருகே பொது கழிப்பறை உள்ளது. இதனை பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க பயன்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று திடீரென கழிப்பறை பூட்டு போட்டு மூடப்பட்டு உள்ளது. இதனால் பஜாருக்கு வந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பயணிகள் அவதி அடைந்தனர். இதுகுறித்து பயணிகள் கூறும்போது, அய்யன்கொல்லி பஜாரில் இருந்து கூடலூர், கேரளாவுக்கு செல்லும் பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்து செல்கின்றனர். பெண்களுக்கு பெரிதும் பயன்பட்டு வந்த கழிப்பறை மூடப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, பயணிகள் நலன் கருதி கழிப்பறையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story