ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு
ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வராமல், வங்கி கணக்கில் எடுத்ததாக குளறுபடியான தகவல் வந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க தஞ்சை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர்;
ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வராமல், வங்கி கணக்கில் எடுத்ததாக குளறுபடியான தகவல் வந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க தஞ்சை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஓய்வு பெற்ற ஆசிரியை
தஞ்சை புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு எதிரே புதுக்கோட்டை சாலையில் வசித்து வருபவர் அருள்ஜோதிதவமணிஹெலன் (வயது 74). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் தனது மாதாந்திர ஓய்வூதியத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு மூலம் பெற்று வருகிறார்.கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாத அருள்ஜோதி தவமணி ஹெலன், தஞ்சையில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் தனது ஓய்வூதிய பணம் ரூ.5 ஆயிரத்தை எடுக்க முயன்றார். ஆனால் பணம் வரவில்லை. ஆனால் எந்திரம் வழங்கிய ரசீதில் பணம் பட்டுவாடா செய்ததற்கான விவரக்குறிப்பு இல்லை. ஆனால் வங்கி கணக்கில் இருந்து ரூ.5ஆயிரம் எடுத்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
ரூ.5 ஆயிரம் இழப்பீடு
இது குறித்து வங்கி தலைமையகத்துக்கு புகார் அனுப்பி, தான் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்காத போது, தனது கணக்கில் கழிக்கப்பட்ட ரூ.5 ஆயிரத்தை திருப்பு வழங்கிட கோரினார். ஆனால் வங்கி தரப்பில் முறையான பதில் இல்லை.இதையடுத்து அருள்ஜோதி தவமணி ஹெலன், தஞ்சை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி மோகன்தாஸ், உறுப்பினர்கள் சுகுணாதேவி, அழகேசன் ஆகியோர் விசாரணை நடத்தி, இது வங்கியின் சேவை குறைபாடு என உத்தரவிட்டதோடு, ரூ.5 ஆயிரம் இழப்பீடாகவும், கோர்ட்டு செலவு ரூ.5 ஆயிரம் என ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.