மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி
மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி நடைபெற உள்ளது.
காரைக்குடி,
இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தாய் அகார் என்ற கடிதம் எழுதும் போட்டி 2047-ல் இந்தியா ஒரு பார்வை என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இப்போட்டியானது 18 வயது வரை மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு என 2 பிரிவுகளில் நடக்கிறது. அஞ்சல் உறையில் தாளில் ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமலும், உள்நாட்டு கடித அட்டையில் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் கடிதம் எழுத வேண்டும். இப்போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் கையால் மட்டுமே எழுத வேண்டும். தட்டச்சு, கணிப்பொறி, மற்ற பிற சாதனங்களால் எழுதப்பட்ட எழுத்துகள் ஏற்கப்படாது. வருகிற 31-10-2022-க்குள் முதன்மை கல்வித்துறை தலைவர் தமிழ்நாடு, சென்னை 600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மாநில மற்றும் தேசிய அளவில் ஒவ்வொரு பிரிவிலும் 3 கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
இந்த தகவலை காரைக்குடி அஞ்சலக கண்காணிப்பாளர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.