நாமக்கல்லில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி


நாமக்கல்லில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி
x

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடந்தது.

நாமக்கல்

நாமக்கல்:

பேச்சுப்போட்டி

நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த போட்டியில் 27 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கருணாநிதி குறித்து 10 தலைப்புகளில் மாணவர்கள் பேசினர்.

மணலி ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிஹரசுதன் முதல் பரிசுக்கும், சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி பாகவி 2-ம் பரிசுக்கும், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் விஜய் 3-ம் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

சிறப்பு பரிசு

இதேபோல் சிறப்பு பரிசுக்கு தண்ணீர்பந்தல்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி பூபனா மற்றும் முத்துகாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி கவுசிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் மாவட்ட கலெக்டரால் பின்னர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ஜோதி, எர்ணாபுரம் தலைமை ஆசிரியர் மேனகா, முதுகலை தமிழாசிரியர்கள் சாந்தி, உமாமகேஸ்வரி, தேன்மொழி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story