கோ-கோ விளையாட்டு போட்டி


கோ-கோ விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோ-கோ விளையாட்டு போட்டி

ராமநாதபுரம்

ராமேசுவரம்

ராமேசுவரத்தில் செயல்பட்டு வரும் அமிர்த வித்யாலயம் பள்ளியில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான கோ-கோ போட்டி நடைபெற்றது. 14 மற்றும் 17 வயதுக்கு கீழ் என இருவகையான போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு அமிர்தா பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி முன்னிலை வகித்தார். இருபிரிவாக நடைபெற்ற இந்த போட்டியில் மண்டபம் கேந்திர வித்யாலயா பள்ளி, ராமநாதபுரம் ஷிபான் பள்ளி, ராமநாதபுரம் செய்யது அம்மாள், அமிர்த வித்யாலயம் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 250 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தேவிபட்டினம் அருகே உள்ள ஷிபான் நூர் குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் அரையிறுதி போட்டியிலும் மற்றும் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவு, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவு, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவு ஆகிய மூன்றிலும் முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ராஜாசிங் மற்றும் அனுசியா பால் ஆகியோரை பள்ளியின் தாளாளர் டாக்டர் மன்சூர், செயலாளர் டாக்டர் நூருல் ஹவ்வா, முதல்வர் நிவேதினி மற்றும் துணை முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Related Tags :
Next Story