பள்ளி கல்வித்துறை சார்பில் பாரம்பரிய கலை போட்டி-1,000 மாணவ, மாணவிகள் பங்கேற்பு


பள்ளி கல்வித்துறை சார்பில் பாரம்பரிய கலை போட்டி-1,000 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற பாரம்பரிய கலை போட்டிகளில் 1,000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கலை போட்டிகள்

தர்மபுரி ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் பாரம்பரிய கலை பண்பாட்டு திருவிழா மற்றும் கலை போட்டிகள் தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இந்த போட்டிகள் தொடக்க விழாவுக்கு மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் ரவிக்குமார் வரவேற்றார். தலைமை ஆசிரியர்கள் தெரசாள், கிருஷ்ணன், சோலினி, செந்தில், ரமாதேவி, சரஸ்வதி, பெருமாள், ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், சுரேஷ் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

பரிசு-சான்றிதழ்

இதில் வாய்ப்பாட்டு இசை, செவியன் வாய்ப்பாட்டு இசை, பாரம்பரிய நாட்டுப்புற இசை கருவி, நடனம், உள்ளூர் தொன்மை நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். அதில் வெற்றி பெறுவோர் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story