மாநில சிறுபான்மை ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி


மாநில சிறுபான்மை ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நேற்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச்சு போட்டிகள் நடந்தன. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் போட்டியை தொடங்கி வைத்தார். நகராட்சி தலைவர் பரிதா நவாப் வரவேற்றார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகராட்சி துணைத் தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி முதல்வர் அனுராதா, அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

தமிழில் நடந்த பேச்சு போட்டிக்கு, பேராசிரியர்கள் வெங்கடேசன், ராஜா, ராஜலட்சுமி, மகேஸ்வரி ஆகியோரும், ஆங்கில பேச்சு போட்டிக்கு பேராசிரியர்கள் கதிரவன், மோகன்குமார், சங்கீதா, ஆர்த்தி ஆகியோரும் நடுவர்களாக செயல்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், நகர செயலாளர் நவாப், தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லாம், நாகராசன், சித்ரா சந்திரசேகர், கோதண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story