பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்
திருப்பத்தூரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடந்தன.
திருப்பத்தூரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடந்தன.
தமிழ்வளர்ச்சிதுறையின் சார்பில் தமிழ்நாடு விழா, தந்தை பெரியார் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற 27 மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ''புதிதாக உருவாகும் வார்த்தைகள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளின் தமிழ் மொழி பெயர்ப்புகள் மற்றும் கையெழுத்து முறை வளர்ச்சி அடைய வேண்டும். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடத்துவதன் மூலம் அவர்களுக்கு மொழியின் மீது ஆர்வம் அதிகரிக்கும்'' என்றார்.
நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சிதுறை இணை இயக்குனர் ராஜேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.